சனி, 13 செப்டம்பர், 2014

நிழல்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து...

வீரவநல்லூரைப்பற்றிய கவிதை கண்டிப்பாக எழுதவேண்டும்

முதல்வரியாக ‘அந்தக் காலத்தில் குளத்தில் நீர் இருந்தது’,

இரண்டு மூன்று வரிகளுக்குப் பின்

சண்முகா கொட்டகையையும் காந்திமதி டாக்கீஸையும்.

ஊரின் செழுமைக்கு

சந்தையில் மண்டிக்கிடந்த காய்கறிக் கூழ் கொஞ்சம்.

மழை வர்ணனையும்

தெருவில் திரிந்த பசுக்கள்பற்றிய குறிப்பும் அவசியம்.

ஊர்ச்சாத்திரை, திரைகட்டிப் படம்,

சின்ன வயதில் சைக்கிள் ஓட்டிய கதை,

கூனியூருக்குச் செல்லும் பாதை, சுமைதாங்கிக் கல்,

பள்ளிக்கூடம், பொது நூலகம் எனத் தேடிப் பிடித்து

வார்த்தைகளை வளைத்தால்

வீரவநல்லூரின், எந்தவொரு ஊரின்

பழைய பொதுப்பிம்பம் தயாராகும்.

ஒரு ஊரைக் கவிதையில் சேமிப்பது சுலபம்.

(ஹரன் பிரசன்னா எழுதிய ‘நிழல்கள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து – தடம் வெளியீடு, 4/31 D, மூன்றாவது மெயின் ரோடு, ராயலா நகர், ராமாபுரம், சென்னை – 89, தொலைபேசி: (0)9884279211.

புதன், 16 ஏப்ரல், 2014

வீரவநல்லூர் சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு துவக்க வலியுறுத்தல்

வீரவநல்லூர்:வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறந்த மருத்துவ பிரிவு துவங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுற்றுப் பகுதி கிராம மக்கள் மருத்துவ வசதிபெற வீரவநல்லூர் வரவேண்டும். மேலும் தீவிர சிகிச்சைக்கு வீரவநல்லூர் வந்து மற்ற ஊர்களுக்கு செல்லவேண்டும்.வீரவநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு அலோபதி சிகிச்சை செய்யப்படுகிறது.
ஆனால் தீராத நாள்பட்ட வியாதிகள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் சித்த வைத்தியத்தில் குணமாகிறது என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

சித்த வைத்தியத்தை முன்பை விட அதிகமாக மக்கள் விரும்புகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் மூலம் சித்த வைத்தியம் மேலும் பிரபலமடைந்துள்ளது.ஆனால் வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த வைத்திய பிரிவு இல்லை. அதனால் சித்த வைத்தியத்தை விரும்புபவர்கள் சேரன்மகாதேவி, அம்பை மற்றும் இதர ஊர்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சித்த வைத்தியப்பிரிவு இயங்குவதால் இப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று சித்த மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.நீண்ட தூரம் சென்று சித்த வைத்தியம் பெற கஷ்டபடுகின்றனர். ஆகையால் வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த வைத்தியப்பிரிவு துவங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: www.dinamalar.com

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

மென்பொருள் விமர்சனம் : டச் பிரீஸ்

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம். என்னுடைய முந்தய பதிவான ஆன்லைன் மாதிரி தேர்வுகள்ஐ படித்தமைக்கு நன்றி. வரும் பதிவுகளில் நான் பயன்படுத்தும் மென்பொருட்களின் பயன்பாடு பற்றி விமர்சனம் (I'm writing software review in tamil) எழுத நிச்சயித்திருக்கிறேன். உண்மையில் இவை என்னுடைய கணினி பயன்பாட்டிருக்கு மிகுவும் உதவியாக உள்ளன.
டச் பிரீஸ் (Touch Freeze):
நீங்கள் மடி-கணினி உபயோகிப்பாளராக இருந்தால் நான் சந்தித்த அதேபிரச்சனையை நீங்களும் சந்தித்திருக்கக் கூடும். தட்டச்சு (டைப்) செய்யும்பொழுது கர்சர் அங்கும் இங்கும் தாவுகிற பிரச்சனை தான் அது. நான் எம்.எஸ்.வேர்டில் அதிகமாக தட்டச்சு செய்யவேண்டிருந்ததால் அது எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. வேலைகளை துரிதமாக செய்ய முடியாமல் போனது. அந்த சமயத்தில் இணையத்தில் உலாவிய பொது சில தகவல்கள் கிடைத்தன. அனைத்து வகை லேப்டாப்களிலும் டச்பேட் (touchpad) எனும் ஒரு உபகரணம் மவுஸ் செயல்பாட்டிற்காக பொருத்தப்பட்டிருக்கும். அதனை நாம் தொடும்பொழுது ஆற்றல் சேகரிப்பு சென்சார் செயல்பட்டு மவுஸ் குறி நகர உதவுகிறது. இதில் குழப்பம் என்னவெனில் நாம் டைப் செய்யும்போதும் அந்த டச்பேடை தவறுதலாக தொட்டுவிடக் கூடும். அப்பொழுது கர்சர் வேறு எங்காவது போய்விடும். இதனால் நாம் தட்டச்சு செய்யவேண்டிய இடத்தில் செய்யாமல் வேறு ஏதாவது பகுதியில் செய்வோம் அல்லது தவற விடுவோம். நாம் கவனமாக டச்பேடை தொடாமல் இருந்த போதும் அதன் உணர்திறன்(sensitiveness) அதிகமாகி கர்சரை நகர்த்திவிடும். நாம் தட்டச்சில் திறம்பெற்றவர்களாக இல்லாவிடில் இப்பிரச்னையால் கடுமையான நேரவிரயம் ஏற்படும். இதற்கு தீர்வு காண முற்பட்ட பொது சில வழிகளை கண்டறிந்தேன். அவற்றில் ஒன்று, பேட்டரியை கழற்றிவிட்டு நேரடியாக AC

மின்னோட்டத்தில் கணினியை இயக்குவது. இம்முறை கணினியின் செயலியை(processor) செயலிழக்கச் செய்துவிடுமாதலால் இது முற்றிலும் தவறான முறை. இதற்க்கு மாற்றாக கிடைத்து தான் டச் பிரீஸ் எனும் இந்த அற்புத மென்பொருள். இது மற்ற அனைத்து முறைகளையும் விட சிறந்தது. இவ்வகைக் குழப்பம் பெரும்பாலும் விண்டோஸ் இயங்கு தளத்தில் இருப்பதினால், இது விண்டோசுக்கென பிரத்யேகமாக உருவாகப்பட்டது. இதனை கூகுள் கோட் பக்கத்திற்கு சென்று தரவிறக்கம் செய்யலாம் அல்லது இங்கு க்ளிக் செய்து நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வியாழன், 30 ஜனவரி, 2014

ஆன்லைன் மாதிரி தேர்வுகள்

பிரியமான இந்த வலைப்பூவின் வாசகர்களுக்கு, எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் நலமா? நன்று. இந்த ப்ளாகில் வீரவநல்லூர் மற்றும் திருநெல்வேலி தொடர்பான தகவல்களை நாங்கள் பதிவிட்டு வருவது தாங்கள் அறிந்ததே. சில பல நல்ல தகவல்களையும் உங்களுக்குத் தர வாஞ்சிக்கிறோம்.
சமீத்தில் நான் ஒரு தளத்தினூடாக கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஆன்லைன் மாதிரி தேர்வுகள் (online sample exams) என்னும் அந்த தளத்தில் ஏராளமான பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகளை (current affairs) என்னால் பார்க்க முடிந்தது. சில quiz களுக்கு நேரக் கட்டுப்பாடு இருந்தது சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்தது. நீங்களும் அத்தளத்தை பயன்படுத்த விரும்புகிறேன். தேர்வு முடிந்ததும் விடைகளையும், விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம். நமது ஈமெயில்க்கும் அனுப்பிக் கொள்ளலாம்.
அடுத்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி, வணக்கம்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

வீரவநல்லூர் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு

நேற்றைய (23/8/13) வீரவநல்லூர் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், அனைவரின் ஏகோபித்த கருத்தான A.T.M பற்றி எடுத்துரைக்க பட்டது. அதற்கு பதிலளித்த மேலாளர் திரு. அமீர் அவர்கள், பேருந்து நிலையம், மெயின் பஜார் ஆகிய இடங்களில் இடம் பார்ப்பதாகவும், அப்படி கிடைக்கவில்லை எனில் ஜனவரி மாதத்தில் வங்கி அலுவலகத்திலேயே திறக்கப்படும் என கூறினார் . இதை எனக்கு இட்ட கட்டளையாக நினைத்து கண்டிப்பாக செயல்படுவதாகவும் உறுதி அளித்தார். அனைவரும் நன்றி பாராட்டினர்.செய்தி: இசக்கி கண்ணன், வீரை.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

தமிழர் வழி - ஸ்ரீ சிவம் செல்வராஜன்

திரு.ஸ்ரீ சிவம்

நேற்று குடும்பத்துடன் ஷாப்பிங் சென்ற இடத்தில் ஒரு நபர் என்னிடம் வந்து நீங்கள் ஸ்ரீலங்காவா என்று கேட்டார், நான் இல்லை தமிழ்நாடு என்றேன், பின்பு மிகவும் தயங்கி தயங்கி என்னுடன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார் தான் சிங்களவர் என்றும் தம்மாமில் இருந்த வருவதாகவும் (From Dammam to Jeddah 1600Km) தன்னுடைய நண்பரை தொடர்புகொள்ள முடியவில்லை, உடைமைகள் திருட்டு போய்விட்டது என்றும் மீண்டும் தம்மாம் செல்ல வேண்டும் கையில் பணமும் இல்லை ஏதாவது உதவி செய்யுங்கள் என்றார். எப்போதும் இது போன்ற நபர்களை நான் ஊக்குவிப்பதில்லை 99% விழுக்காடு பொய்யர்கள், அவர் சொல்வது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை, சும்மாவே சிங்களவன் என்றாலே நமக்கு பற்றி கொண்டு வரும், ஆனாலும் அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" 
என்ற வள்ளுவன் வாக்கை மெய்பிக்க வேண்டும் சிங்களவனுக்கும் தமிழன் உதவி செய்வான் என்பதை அவர் உணரவேண்டும் என்ற ஒரே நேக்கத்தொடு மட்டும் அவருக்கு என்னாலான ஒரு சிறிய உதவியை செய்தேன். எம் இனத்தை கருவறுக்க துடிக்கும் சிங்கள வெறியர்களுக்கும் எம் இனம் எப்போதும் கருணை காட்டியே வருகிறது.. ஏனென்றால் நாங்கள் தமிழர்கள் நாங்கள் வந்த வழி அது எங்கள் தலைவரும், தமிழும் காட்டிய வழி. எழுதியவர்: திரு. ஸ்ரீ சிவம் செல்வராஜன், வீரவநல்லூர்.

சனி, 13 அக்டோபர், 2012

வீரவநல்லூர் துணை மின் நிலையத்தில் தீ - மக்கள் மகிழ்ச்சி

நேற்று இரவு வீரவநல்லூர் துணை மின் நிலையத்தின் மின் மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது. இதெல்லாம் ஒரு செய்தியா? நாங்கெல்லாம் 8 மணி நேரம் தொடர்ந்து பவர் கட் ஆனாலே தாங்குவோம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. உண்மையான (இனிப்பான) செய்தி இனிமேல் தான் வருகிறது. தொடர்ந்து படியுங்கள். அந்த விபத்தைப் பற்றியும் அதைத் தொடர்ந்து இன்று காலை வரை மின் விநியோகம் இருக்காது என்றும் நம் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். அந்த விபத்தில் ஏற்பட்ட பழுதுகளை மின் வாரிய பணியாளர்கள் மிக துரிதமாக செயல்பட்டு, வெகு விரைவாக பழுதுகளை நீக்கி இரவு 1.30 மணிக்கெல்லாம் மின்சாரம் வழங்கிவிட்டனர். ஆனால் அந்த விபத்தில்  மின்சாரத்தை துண்டித்து மீண்டும் இயக்கும் பட்டன்கள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டன. இதானால் நமக்கு கல்லூரிலிருந்து நேரடியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பிரச்சனை சரியாக 2 அல்லது 3 நாட்கள் ஆகுமென்பதால் நமக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.