சனி, 31 ஆகஸ்ட், 2013

வீரவநல்லூர் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு

நேற்றைய (23/8/13) வீரவநல்லூர் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், அனைவரின் ஏகோபித்த கருத்தான A.T.M பற்றி எடுத்துரைக்க பட்டது. அதற்கு பதிலளித்த மேலாளர் திரு. அமீர் அவர்கள், பேருந்து நிலையம், மெயின் பஜார் ஆகிய இடங்களில் இடம் பார்ப்பதாகவும், அப்படி கிடைக்கவில்லை எனில் ஜனவரி மாதத்தில் வங்கி அலுவலகத்திலேயே திறக்கப்படும் என கூறினார் . இதை எனக்கு இட்ட கட்டளையாக நினைத்து கண்டிப்பாக செயல்படுவதாகவும் உறுதி அளித்தார். அனைவரும் நன்றி பாராட்டினர்.செய்தி: இசக்கி கண்ணன், வீரை.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

தமிழர் வழி - ஸ்ரீ சிவம் செல்வராஜன்

திரு.ஸ்ரீ சிவம்

நேற்று குடும்பத்துடன் ஷாப்பிங் சென்ற இடத்தில் ஒரு நபர் என்னிடம் வந்து நீங்கள் ஸ்ரீலங்காவா என்று கேட்டார், நான் இல்லை தமிழ்நாடு என்றேன், பின்பு மிகவும் தயங்கி தயங்கி என்னுடன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார் தான் சிங்களவர் என்றும் தம்மாமில் இருந்த வருவதாகவும் (From Dammam to Jeddah 1600Km) தன்னுடைய நண்பரை தொடர்புகொள்ள முடியவில்லை, உடைமைகள் திருட்டு போய்விட்டது என்றும் மீண்டும் தம்மாம் செல்ல வேண்டும் கையில் பணமும் இல்லை ஏதாவது உதவி செய்யுங்கள் என்றார். எப்போதும் இது போன்ற நபர்களை நான் ஊக்குவிப்பதில்லை 99% விழுக்காடு பொய்யர்கள், அவர் சொல்வது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை, சும்மாவே சிங்களவன் என்றாலே நமக்கு பற்றி கொண்டு வரும், ஆனாலும் அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" 
என்ற வள்ளுவன் வாக்கை மெய்பிக்க வேண்டும் சிங்களவனுக்கும் தமிழன் உதவி செய்வான் என்பதை அவர் உணரவேண்டும் என்ற ஒரே நேக்கத்தொடு மட்டும் அவருக்கு என்னாலான ஒரு சிறிய உதவியை செய்தேன். எம் இனத்தை கருவறுக்க துடிக்கும் சிங்கள வெறியர்களுக்கும் எம் இனம் எப்போதும் கருணை காட்டியே வருகிறது.. ஏனென்றால் நாங்கள் தமிழர்கள் நாங்கள் வந்த வழி அது எங்கள் தலைவரும், தமிழும் காட்டிய வழி. எழுதியவர்: திரு. ஸ்ரீ சிவம் செல்வராஜன், வீரவநல்லூர்.