ஞாயிறு, 29 ஜூலை, 2012

வீரவநல்லூரில் சென்னை சில்க்ஸ் நிழற்குடை மற்றும் மரக்கன்றுகள்

வீரவநல்லூரில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிழற்குடை மற்றும் மரக்கன்றுகள் அமைவிருக்கிறது என்ற செய்தி நடப்புச் செய்திகள் கேட்ட வீரவநல்லூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீரவநல்லூர் பயணிகள் பயன்பெறும் வகையில் வீரவநல்லூர் - நெல்லை சந்திப்பு பேருந்து தற்போது பெரியகோவில் வரை வந்து செல்கிறது. அப்பேருந்து காலை, மாலை இரு வேளைகளிலும் வீரவநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து காந்திசிலை, நாற்கால் சதுக்கம் வழியாக பெரியகோவில் வரை சென்று திரும்புகிறது. குறிப்பாக நாற்கால் சதுக்கம் பேருந்து நிறுத்தத்தில் கணிசமான பயணிகள் ஏறி இறங்கி வருகின்றனர். இதனால் அந்த இடத்தில்(2வது வார்டு) பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து வீரவநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் 2வது வார்டு கவுன்சிலர் திரு. மாரியப்பன் அவர்கள் எடுத்த முயற்சியால் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மூலம் பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் தலைவர் S.K.பழனிச்சாமி மற்றும் இதர உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் கவுன்சிலர் மாரியப்பன் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் கூடுதல் தகவலாக வீரவநல்லூரில் மரக்கன்றுகள் நட்டு அவற்றைப் பாதுகாக்க இரும்பு வேலிகளும் அமைத்து தர தி சென்னை சில்க்ஸ் நிர்வாகிகள் சம்மதித்துள்ளதாகவும் கவுன்சிலர் மாரியப்பன் நம் தளத்திற்கு தெரிவித்தார்.