ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

மென்பொருள் விமர்சனம் : டச் பிரீஸ்

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம். என்னுடைய முந்தய பதிவான ஆன்லைன் மாதிரி தேர்வுகள்ஐ படித்தமைக்கு நன்றி. வரும் பதிவுகளில் நான் பயன்படுத்தும் மென்பொருட்களின் பயன்பாடு பற்றி விமர்சனம் (I'm writing software review in tamil) எழுத நிச்சயித்திருக்கிறேன். உண்மையில் இவை என்னுடைய கணினி பயன்பாட்டிருக்கு மிகுவும் உதவியாக உள்ளன.
டச் பிரீஸ் (Touch Freeze):
நீங்கள் மடி-கணினி உபயோகிப்பாளராக இருந்தால் நான் சந்தித்த அதேபிரச்சனையை நீங்களும் சந்தித்திருக்கக் கூடும். தட்டச்சு (டைப்) செய்யும்பொழுது கர்சர் அங்கும் இங்கும் தாவுகிற பிரச்சனை தான் அது. நான் எம்.எஸ்.வேர்டில் அதிகமாக தட்டச்சு செய்யவேண்டிருந்ததால் அது எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. வேலைகளை துரிதமாக செய்ய முடியாமல் போனது. அந்த சமயத்தில் இணையத்தில் உலாவிய பொது சில தகவல்கள் கிடைத்தன. அனைத்து வகை லேப்டாப்களிலும் டச்பேட் (touchpad) எனும் ஒரு உபகரணம் மவுஸ் செயல்பாட்டிற்காக பொருத்தப்பட்டிருக்கும். அதனை நாம் தொடும்பொழுது ஆற்றல் சேகரிப்பு சென்சார் செயல்பட்டு மவுஸ் குறி நகர உதவுகிறது. இதில் குழப்பம் என்னவெனில் நாம் டைப் செய்யும்போதும் அந்த டச்பேடை தவறுதலாக தொட்டுவிடக் கூடும். அப்பொழுது கர்சர் வேறு எங்காவது போய்விடும். இதனால் நாம் தட்டச்சு செய்யவேண்டிய இடத்தில் செய்யாமல் வேறு ஏதாவது பகுதியில் செய்வோம் அல்லது தவற விடுவோம். நாம் கவனமாக டச்பேடை தொடாமல் இருந்த போதும் அதன் உணர்திறன்(sensitiveness) அதிகமாகி கர்சரை நகர்த்திவிடும். நாம் தட்டச்சில் திறம்பெற்றவர்களாக இல்லாவிடில் இப்பிரச்னையால் கடுமையான நேரவிரயம் ஏற்படும். இதற்கு தீர்வு காண முற்பட்ட பொது சில வழிகளை கண்டறிந்தேன். அவற்றில் ஒன்று, பேட்டரியை கழற்றிவிட்டு நேரடியாக AC

மின்னோட்டத்தில் கணினியை இயக்குவது. இம்முறை கணினியின் செயலியை(processor) செயலிழக்கச் செய்துவிடுமாதலால் இது முற்றிலும் தவறான முறை. இதற்க்கு மாற்றாக கிடைத்து தான் டச் பிரீஸ் எனும் இந்த அற்புத மென்பொருள். இது மற்ற அனைத்து முறைகளையும் விட சிறந்தது. இவ்வகைக் குழப்பம் பெரும்பாலும் விண்டோஸ் இயங்கு தளத்தில் இருப்பதினால், இது விண்டோசுக்கென பிரத்யேகமாக உருவாகப்பட்டது. இதனை கூகுள் கோட் பக்கத்திற்கு சென்று தரவிறக்கம் செய்யலாம் அல்லது இங்கு க்ளிக் செய்து நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.