சனி, 13 அக்டோபர், 2012

வீரவநல்லூர் துணை மின் நிலையத்தில் தீ - மக்கள் மகிழ்ச்சி

நேற்று இரவு வீரவநல்லூர் துணை மின் நிலையத்தின் மின் மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது. இதெல்லாம் ஒரு செய்தியா? நாங்கெல்லாம் 8 மணி நேரம் தொடர்ந்து பவர் கட் ஆனாலே தாங்குவோம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. உண்மையான (இனிப்பான) செய்தி இனிமேல் தான் வருகிறது. தொடர்ந்து படியுங்கள். அந்த விபத்தைப் பற்றியும் அதைத் தொடர்ந்து இன்று காலை வரை மின் விநியோகம் இருக்காது என்றும் நம் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். அந்த விபத்தில் ஏற்பட்ட பழுதுகளை மின் வாரிய பணியாளர்கள் மிக துரிதமாக செயல்பட்டு, வெகு விரைவாக பழுதுகளை நீக்கி இரவு 1.30 மணிக்கெல்லாம் மின்சாரம் வழங்கிவிட்டனர். ஆனால் அந்த விபத்தில்  மின்சாரத்தை துண்டித்து மீண்டும் இயக்கும் பட்டன்கள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டன. இதானால் நமக்கு கல்லூரிலிருந்து நேரடியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பிரச்சனை சரியாக 2 அல்லது 3 நாட்கள் ஆகுமென்பதால் நமக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக