வெள்ளி, 27 ஏப்ரல், 2012

வீரவநல்லூரில் யானைக்கால் மாத்திரைகள்




வீரவநல்லூரில் யானைக்கால் நோய் பாதித்தோர் அதிகமாக உள்ளதால் அந்நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. T.E.C (100 mg) மாத்திரைகள் 2 - 5 வயது உள்ளவர்களுக்கு ஒன்றும், 6-14 வயதுள்ளோருக்கு 2 மாத்திரைகளும், 15-60 வயதுள்ளோருக்கு 3 மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. அதனுடன் சேர்த்து அல்பண்டோசோல் (400 mg) மாத்திரை ஒன்று வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகளை அனைவரும் உட்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இதை உட்கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் இம்மாதிரைகள் வயிற்றில் உள்ள
கிருமிகளைக் கொல்லும் சக்தி படைத்தவை.
குறிப்புகள்:
1.மாத்திரைகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
2.இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்டோர் இம்மாத்திரை உட்கொள்வதை தவிர்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக