கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வில் வீரவநல்லூரை சேர்ந்த மாணவ மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். செயின்ட் ஜான்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவிதிக தேர்ச்சி பெற்று நம் ஊருக்கு பெருமை தேடித் தந்தனர். அப்பள்ளி மாணவர் பி. எடிசன் காட்லின் 1152 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதலாவது மாணவனாக வந்தார். அவர் அனைத்து பாடங்களிலும் 185 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து (தமிழ்-186, ஆங்கிலம்-186, கணிதம்-191, இயற்பியல்-193, வேதியல்-199, உயிரியல்-197) அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். அவருக்கு அடுத்த படியாக 1143 மதிப்பெண்கள் எடுத்து எஸ்.சொர்ணலதா என்ற மாணவி இரண்டாம் இடம் பிடித்தார். மாணவி செலின், மாணவர் உதயகுமார் ஆகிய இருவரும் 1118 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர். வீரவநல்லூரில் உள்ள மற்றொரு பள்ளியான பாரதியார் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 85 சதவிகத மதிப்பெண்கள் பெற்றனர். அப்பள்ளியை சேர்ந்த ரஞ்சிதம் என்ற மாணவி 1053 மதிப்பெண்கள் எடுத்து அப்பள்ளியில் முதலிடம் பிடித்தார். தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வீரவநல்லூர் வலைதளம் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வோம்!
வெள்ளி, 25 மே, 2012
வெள்ளி, 27 ஏப்ரல், 2012
வீரவநல்லூரில் யானைக்கால் மாத்திரைகள்
வீரவநல்லூரில் யானைக்கால் நோய் பாதித்தோர் அதிகமாக உள்ளதால் அந்நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. T.E.C (100 mg) மாத்திரைகள் 2 - 5 வயது உள்ளவர்களுக்கு ஒன்றும், 6-14 வயதுள்ளோருக்கு 2 மாத்திரைகளும், 15-60 வயதுள்ளோருக்கு 3 மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. அதனுடன் சேர்த்து அல்பண்டோசோல் (400 mg) மாத்திரை ஒன்று வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகளை அனைவரும் உட்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இதை உட்கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் இம்மாதிரைகள் வயிற்றில் உள்ள
வியாழன், 1 டிசம்பர், 2011
செவ்வாய், 1 நவம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


