வெள்ளி, 25 மே, 2012

வீரவநல்லூர் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் சாதனை


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வில் வீரவநல்லூரை சேர்ந்த மாணவ மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். செயின்ட் ஜான்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவிதிக தேர்ச்சி பெற்று நம் ஊருக்கு பெருமை தேடித் தந்தனர். அப்பள்ளி மாணவர் பி. எடிசன் காட்லின் 1152 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதலாவது மாணவனாக வந்தார். அவர் அனைத்து பாடங்களிலும் 185 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து (தமிழ்-186, ஆங்கிலம்-186, கணிதம்-191, இயற்பியல்-193, வேதியல்-199, உயிரியல்-197) அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். அவருக்கு அடுத்த படியாக 1143 மதிப்பெண்கள் எடுத்து எஸ்.சொர்ணலதா என்ற மாணவி இரண்டாம் இடம் பிடித்தார். மாணவி செலின், மாணவர் உதயகுமார் ஆகிய இருவரும் 1118 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர். வீரவநல்லூரில் உள்ள மற்றொரு பள்ளியான பாரதியார் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 85 சதவிகத மதிப்பெண்கள் பெற்றனர். அப்பள்ளியை சேர்ந்த ரஞ்சிதம் என்ற மாணவி 1053 மதிப்பெண்கள் எடுத்து அப்பள்ளியில் முதலிடம் பிடித்தார். தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வீரவநல்லூர் வலைதளம் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வோம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக