நெல்லை மாவட்ட மக்களின் 3 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறியது! ஆம், 220 கோடி செலவில் 2009 ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்த நெல்லை - தென்காசி அகல ரயில் பாதை பணிகள் முடிவடைத்து கடந்த வெள்ளிக் கிழமை (21 செப்) ரயில் சேவைகள் தொடங்கின. இந்நிகழ்வை அடுத்து ஒவ்வொரு நிறுத்ததிலும் பட்டாசுகள் வெடித்தும், வாத்தியங்களை வாசித்தும், ரயில்வே பணியாளர்களுக்கு மாலை அணிவித்தும் மக்கள் வெகு விமரிசையாக ரயிலை வரவேற்றனர். பேருந்துக் கட்டணத்தை விட ரயில் கட்டணம் மிக மிகக் குறைவு என்பதால் வீரவநல்லூர் மக்கள் உட்பட அனைத்து நெல்லைவாசிகளும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இனி பேருந்துகளில் கூட்டம் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் நெல்லை சந்திப்பில் இருந்து வீரவநல்லூருக்கு 34 நிமிடங்களும் அங்கிருந்து தென்காசிக்கு 1 மணி 20 நிமிடங்களும் மட்டுமே ஆகுமென்பதால் நேரமும் மிச்சமாகும்.
செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில் எண் 56796:
இந்த ரயில் காலை 6.30 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு தென்காசி(6:41), ஆழ்வார்குறிச்சி(7:16), அம்பாசமுத்திரம்(7:31), கல்லிடைக்குறிச்சி(7:39) வழியாக வீரவநல்லூர் (7:46) வந்து பின் 8:45 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.
திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் எண் 56797:
இந்த ரயில் காலை 9.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு நெல்லை நகரம்(9:34) , பேட்டை(9:39), சேரன்மகாதேவி(9:49) வழியாக வீரவநல்லூர் (9:56) வந்து பின் 11.03 மணிக்கு தென்காசியை சென்றடைந்து அங்கிருத்து 11.05 க்கு புறப்பட்டு சரியாக 11.45 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில் எண் 56798:
மேற்சொன்ன அதே ரயில், 56798 என்ற பெயரில் செங்கோட்டையிலிருந்து மீண்டும் 3.15pm க்கு (15.15) புறப்பட்டு தென்காசி(3.26pm), ஆழ்வார்குறிச்சி(4pm), அம்பாசமுத்திரம்(4:16pm), கல்லிடைக்குறிச்சி(4:22pm) வழியாக வீரவநல்லூர் (4:30) வந்து பின் மாலை 5:30(17:30) மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.
திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் எண் 56799:
இந்த ரயில் (56799 என்று பெயர் மாற்றம் செய்யப்பட 56796 ரயில்) மாலை 6.20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு நெல்லை நகரம்(6.24pm) , பேட்டை(6.29pm), சேரன்மஹாதேவி(6.39pm) வழியாக வீரவநல்லூர் (6:47pm) வந்து பின் சரியாக இரவு 8.35 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
கட்டண விவரங்கள்:

From | To | Fare |
---|---|---|
திருநெல்வேலி | பேட்டை | ரூ.2 |
திருநெல்வேலி | சேரை | ரூ.3 |
திருநெல்வேலி | வீரவநல்லூர் | ரூ.4 |
திருநெல்வேலி | அம்பை | ரூ.5 |
திருநெல்வேலி | கடையம் | ரூ.8 |
திருநெல்வேலி | பாவூர் | ரூ.10 |
திருநெல்வேலி | தென்காசி | ரூ.12 |
திருநெல்வேலி | செங்கோட்டை | ரூ.13 |
வீரவநல்லூர் | தென்காசி | ரூ.8 |
மேலும் பொது மக்களுக்கான மாதந்திர சீசன் டிக்கெட் (திருநெல்வேலி - வீரவநல்லூர்) ரூ.115 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சலுகை விலை சீசன் டிக்கெட்டும் அமல் படுத்தப்பட்டுள்ளது.
News Summary in English:
We feel very happy to post this news that the Tirunelveli to Shengottai Train has been re-launched on last Friday (Sep 21) as the 3 years of Tirunelveli to Tenkasi broad-gauge works were finished successfully. All the nellai people including the citizens of Veeravanallur are very cheerful to welcome the train as the train tickets as well as the traveling time are too lower than bus.
Train Fares:
Tirunelveli - Veeravanallur ==> Rs.4
Tirunelveli - Tenkasi ==> Rs.12
Veeravanallur - Tenkasi ==> Rs.8
Tirunelveli - Veeravanallur ==> Rs.115 (monthly season ticket for public)
Our Sincere Thanks to:
- Mr.Jeeva, Loco Pilot, Southern Railways
- Mr.S.James, Headmaster, Kallidaikurichi Union Middle School
- www.erail.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக